முகப்பு
இந்தியா

ஒடிசாவில் 2021 ஜனவரி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க வாய்ப்பு

ஒடிசா மாநிலத்தில் கரோனா தொற்றால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் 2021 ஜனவரி முதல் மீண்டும் திறக்க ஆலோசித்து வருவதாக மாநில அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

Updated On : 10 டிசம்பர், 2020 at 7:18 PM
கோப்புப்படம்
பகிர்:

ஒடிசா மாநிலத்தில் கரோனா தொற்றால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் 2021 ஜனவரி முதல் மீண்டும் திறக்க ஆலோசித்து வருவதாக மாநில அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

கரோனா தொற்று பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இணைய வழியில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

முதற்கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் எனவும், திருவிழா விடுமுறைகள் தவிர, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் எனவும் மாநில கல்வி அமைச்சர் சமீர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

எனினும் இறுதிமுடிவு இன்னும் எட்டப்படவில்லை எனவும், உறுதியான முடிவு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.