உத்தரகண்டில் டிச.15 முதல் மீண்டும் கல்வி நிலையங்கள் திறப்பு
உத்தரகண்டில் உள்ள கல்வி நிலையங்கள் 50 சதவீத மாணவர்களுடன், மீண்டும் டிச.15-ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக உத்தரகண்ட் அரசு முடிவு செய்துள்ளது.
உத்தரகண்டில் உள்ள கல்வி நிலையங்கள் 50 சதவீத மாணவர்களுடன், மீண்டும் டிச.15-ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக உத்தரகண்ட் அரசு முடிவு செய்துள்ளது.
வகுப்பினுள் மாணவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய கடுமையான கரோனா வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 32 அரசு மற்றும் அரசு சாரா பல்கலைக்கழகங்களுடன் சுமார் 500 அரசு, அரசு சாரா மற்றும் தனியார் கல்லூரிகள் மாநிலத்தில் உள்ளன.
வகுப்புகளை நடத்தும்போது, மாநில அரசு மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணையம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி கரோனா வழிகாட்டுதல்களையும் மாணவர்கள் கண்டிப்பாக பின்பற்றுமாறு பள்ளி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உத்தரகண்டில் தற்போது 5,456 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.72,880 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 1,320 பேர் பலியாகியுள்ளனர் என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.