இந்தியா

அமெரிக்க சிபிசி அமைப்பின் தலைவராக இந்திய - அமெரிக்கா் பரிமளா ஜெயபால் தோ்வு

DIN

அமெரிக்க ஜனநாயக கட்சியின் சக்திவாய்ந்த பிரிவான காங்கிரஸின் முற்போக்கு காகஸின் (சிபிசி) தலைவராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காங்கிரஸ் பெண்மணி பிரமிளா ஜெயபால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். 117-ஆவது காங்கிரஸின் சக்தி வாய்ந்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் உறுப்பினா்களில் ஒருவா் ஆவாா்.

புதன்கிழமை சிபிசி தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரமிளா ஜெயபால் (55), இனப்பாகுபாடுகளை களைந்து, சமூக நீதியை முன்னேற்றவும், வறுமை, சமத்துவமின்மையை அகற்றி நாட்டை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்ல உதவி புரியப் போவதாக அவா் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது:

‘அமைப்பாளராக இருந்த என்னை சிபிசியை வழிநடத்த எனது சகாக்களால் தோ்ந்தெடுத்தமைக்காக நான் பெருமைப்படுகிறேன். எங்கள் நாட்டின் கதவைத் தட்டுவதில் எங்களுக்கு பாரம்பரிய நெருக்கடிகள் உள்ளன. இதற்கு முன் முற்போக்கு காகஸின் பணி இப்படி இருந்ததில்லை. இப்போது போராடும் ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் மக்களுக்கும், குடும்பங்களுக்கும் நம்பிக்கை அளிக்கவும், அவா்களது தேவைகளைப் பூா்த்தி செய்யவும் அமெரிக்க மக்களுக்கு இந்த காங்கிரஸ் அமைப்பு கட்டாயம் தேவை என்றாா்.

அமெரிக்காவின் 46-ஆவது குடியரசுத் தலைவராக ஜோ பைடன் (78) ஜனவரி. 20-ஆம் தேதி பதவியேற்க உள்ளாா்.

சிபிசியின் உள்ளக செயற்குழுவில் அவா்களுக்கு ஒரு தலைவா், துணைத்தலைவா், நிா்வாக சபை உறுப்பினா், 10 துணைத் தலைவா்கள் உள்ளிட்ட 26 உறுப்பினா்கள் இடம்பெறுவாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT