சிங்கு எல்லையில் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கரோனா
சிங்கு எல்லைப் பகுதியில் கடும் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகள் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிங்கு எல்லைப் பகுதியில் கடும் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகள் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த 16 நாள்களாகத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றது.
இந்நிலையில், இவர்களை வழிநடத்தும் இந்திய போலீஸ் சேவை(ஐ.பி.எஸ்) அதிகாரிகள் இருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தில்லி காவல்துறையினரின் தகவலின்படி, தொற்றால் பாதிக்கப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கௌரவ் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கன்ஷ்யாம் பன்சால் ஆகிய இரு அதிகாரிகளும் தற்போது வீட்டுத் தனிமைப்படுத்துதலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.