சுமார் 5 மாதங்களுக்குப் பின்.. கரோனா சிகிச்சை பெறுவோர் 3.63 லட்சமாகக் குறைந்தது
நாட்டில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 3.63 லட்சமாகக் (3,63,749) குறைந்தது. கடந்த 146 நாட்களில் இது மிகவும் குறைவான எண்ணிக்கை. இதற்கு முன் கடந்த ஜூலை 18ம் தேதி, சிகிச்சை பெறுபவர்க
புது தில்லி: நாட்டில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 3.63 லட்சமாகக் (3,63,749) குறைந்தது. கடந்த 146 நாட்களில் இது மிகவும் குறைவான எண்ணிக்கை. இதற்கு முன் கடந்த ஜூலை 18ம் தேதி, சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 3,58,692ஆகக் குறைந்தது.
நாட்டில் தற்போது சிகிச்சை பெறுபவர்கள், மொத்த பாதிப்பில் 3.7 சதவீதமாக உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில், 37,528 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் 8,544 குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 29,398 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement
குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 93 லட்சத்தை (92,90,834) நெருங்குகிறது. குணமடைந்தவர்களுக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்குமான இடைவெளி இன்று 89,27,085ஆக உள்ளது. புதிய பாதிப்பைவிட, குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குணமடைந்தோர் வீதம் 94.84 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 414 பேர் உயிரிழந்துள்ளனர்.