பாரதத் தாயின் புதல்வன் மகாகவி சுப்பிரமணிய பாரதி: அமித்ஷா புகழஞ்சலி
பாரதத் தாயின் புதல்வன் மகாகவி சுப்பிரமணிய பாரதி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
பாரதத் தாயின் புதல்வன் மகாகவி சுப்பிரமணிய பாரதி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
மகாகவி பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழில் வெளியிட்ட சுட்டுரை பதிவில், பாரதத் தாயின் புதல்வன் மகாகவி சுப்பிரமணிய பாரதி அவர்களின் ஜெயந்திக்கு எனது அஞ்சலி.
இவர் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான ஒரு முன்னோடி ஆவார். பாரதி தேசிய ஒற்றுமையின் சின்னமாக விளங்கினார். இவரின் தேசபக்தி கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தின் போது மக்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்தன. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.