முகப்பு
இந்தியா

ம.பி.யில் போதைப்பொருள் அதிகரிப்பு: இன்று அவசர ஆலோசனை

மத்தியப் பிரதேசத்தில் மூத்த அதிகாரிகளுடனான அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல்வர் சிவராஜ் சிங் செளகான் அழைப்பு விடுத்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் (கோப்புப்படம்)
பகிர்:

மத்தியப் பிரதேசத்தில் மூத்த அதிகாரிகளுடனான அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல்வர் சிவராஜ் சிங் செளகான் அழைப்பு விடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் போதைப்பொருள்கள் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில் ஆலோசனை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் போதைப்பொருள்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அவ்வபோது வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் மாநிலத்திலுள்ள மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல்வர் சிவராஜ் சிங் செளகான் அழைப்பு விடுத்துள்ளார். 

மத்தியப்பிரதேசத்தில் குறிப்பிட்ட 15 மாவட்டங்களின்  ஆட்சியர்கள் உள்பட காவல்துறை உயர் அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று காரணமாகவும், அவசர ஆலோசனைக் கூட்டம் என்பதாலும் காணொலி வாயிலாக கூட்டம் நடைபெறவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →