முகப்பு
இந்தியா

மேற்கு வங்க முன்னாள் முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தனியார் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா
பகிர்:

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தனியார் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. 

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா(76) மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 9-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

வெண்டிலேட்டர் உதவியுடன் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அவ்வப்போது அவரின் உடல்நிலை கண்காணித்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

முன்னாள் முதல்வர் வெண்டிலேட்டர் உதவியுடன் இருக்கும்போது இரண்டு முறை பேசவும், கண்களைத் திறக்கவும் முயன்றதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

அவருக்கு கரோனா தொற்று இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →