முகப்பு
இந்தியா

பாஜகவின் ஊதுகுழலாக செயல்படும் ஆளுநர்: திரிணாமுல் காங்கிரஸ் விமர்சனம்

நெருப்புடன் விளையாட வேண்டாம் என பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகனம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த மேற்கு வங்க ஆளுநரை பாஜகவின் ஊதுகுழலாக செயல்படுவதாக திரிணாமுல் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
கல்யாண் பானர்ஜி
பகிர்:

நெருப்புடன் விளையாட வேண்டாம் என பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகனம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த மேற்கு வங்க ஆளுநரை பாஜகவின் ஊதுகுழலாக செயல்படுவதாக திரிணாமுல் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

இரண்டு நாள் பயணமாக மேற்குவங்கம் சென்ற பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில் வியாழக்கிழமை வைர துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் சென்று கொண்டிருந்த போது அவரது வாகனம் கற்களால் தாக்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த மேற்குவங்க மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு முதல்வர் மம்தா பானர்ஜி நெருப்புடன் விளையாட வேண்டாம் எனக் கருத்து தெரிவித்தார்.

இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாண் பானர்ஜி, மேற்கு வங்க ஆளுநர் பாஜகவின் ஊதுகுழலாக செயல்படுவதாக விமர்சனம் செய்தார்.

மேலும் இந்த சம்பவத்தில் மத்திய அரசு தங்களது அதிகாரத்தை மீறி செயல்படுவதாகவும், இதுகுறித்து மாநில சட்டப்பேரவையில் உரிய விளக்கம் அளிக்கப்படும் எனவும் கல்யாண் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →