முகப்பு
இந்தியா

நாட்டில் ஜனநாயகம் இல்லை; அதிகாரத்துவமே அதிகம் உள்ளது: ப. சிதம்பரம்

நாட்டில் ஜனநாயகம் இல்லை, அதிகப்படியான அதிகாரத்துவமே உள்ளது என காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
ப. சிதம்பரம்
பகிர்:

நாட்டில் ஜனநாயகம் இல்லை, அதிகப்படியான அதிகாரத்துவமே உள்ளது என காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நாட்டில் ஜனநாயகத் தன்மை அதிகம் உள்ளதாக நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகிறார். ஆனால், நாட்டில் அதிகாரத்துவமே அதிகமாக இருக்கிறது என்று வேதனையுடன் இந்த ஜனநாயகவாதி(சிதம்பரம்) கூறுகிறார்' என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, 'இந்தியா ஜனநாயகத் தன்மை அதிகம் கொண்ட நாடு. எனவே இங்கு கடுமையான சீர்திருத்தங்கள் மிகவும் கடினம். ஆனால், அரசியல் மூலமாக சில சீர்திருத்தங்களை நிறைவேற்றப்பட்ட நிலையில் மேலும் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளன' என்று நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்திருந்தார்.

நாட்டில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அமிதாப் காந்த் இவ்வாறு கூறியுள்ளதற்கு எதிர்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →