முகப்பு
இந்தியா

நாட்டில் கரோனாவிலிருந்து மீண்டோர் விகிதம் 94.88% ஆக உயர்வு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 30,006 ஆக உள்ளது. கரோனா பாதித்தவர்களில் 442 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
நாட்டில் கரோனாவிலிருந்து மீண்டோர் விகிதம் 94.88% ஆக உயர்வு
பகிர்:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 30,006 ஆக உள்ளது. கரோனா பாதித்தவர்களில் 442 பேர் உயிரிழந்தனர்.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,

சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 30,006 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98,26,775 ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல், கரோனா தொற்றுக்கு மேலும் 442 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த உயிரிழப்பு 1,42,628-ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், நாடு முழுவதும் தொற்று பாதிப்பிலிருந்து இதுவரை 93,24,328 போ் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனா். இது, மொத்த பாதிப்பில் 94.88 சதவீதமாகும்.

நாட்டில் இப்போது 3,59,819 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்த பாதிப்பில் இது 3.66 சதவீதமாகும். புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கையும், சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, டிசம்பா் 9-ஆம் தேதி வரை 15,26,97,399 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், டிசம்பர் 11ம் தேதி மட்டும் 10,65,176 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.