காஷ்மீரில் முதல் பனிமழைப் பொழிவு; சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் - படங்கள் 
இந்தியா

காஷ்மீரில் முதல் பனிமழைப் பொழிவு; சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் - படங்கள்

கடுங்குளிருக்கு மத்தியில் காஷ்மீர் மக்கள் இன்று காலை கண்விழித்தபோது, மிக ரம்மியமான பனிப்பொழிவும், வெள்ளைப் போர்வை போர்த்திய வெளிஉலகையும் கண்டிருப்பார்கள்.

ANI


ஸ்ரீநகர்: கடுங்குளிருக்கு மத்தியில் காஷ்மீர் மக்கள் இன்று காலை கண்விழித்தபோது, மிக ரம்மியமான பனிப்பொழிவும், வெள்ளைப் போர்வை போர்த்திய வெளிஉலகையும் கண்டிருப்பார்கள்.

இந்த ஆண்டின் குளிர்காலத்தில் முதல் பனிப்பொழிவு காஷ்மீரில் இன்று ஏற்பட்டது. உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

காஷ்மீரில் பனிப்பொழிவு தொடங்கியிருப்பதற்கு, சுற்றுலாவை நம்பியிருக்கும் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பனிப்பொழிவு தொடங்கியிருப்பதால், இனி சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும், கரோனா பொதுமுடக்கத்தால் முடங்கிப் போயிருந்த தங்கள் வாழ்வாதாரம் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

காஷ்மீரின் எல்லைப் பகுதிகளில் இன்று பரவலாக பனிமழை பெய்துள்ளது. பனிமழை பெய்த பகுதிகள் அனைத்தும் வெள்ளை வெளேர் என்று காட்சியளிக்கிறது. பனிமழையால் தண்ணீர் வரத்தும் அதிகரிக்கும், அதே வேளையில் சுற்றுலாப் பயணிகளையும் வரவழைக்கும் என்கிறார் கார் ஒட்டுநர் தனீஷ்.

முதல் முறையாக காஷ்மீர் வந்திருக்கும் சுற்றுலாப் பயணிகளும், பனிமழையைக் கண்டு உற்சாகம் அடைந்தனர். பல சாலைகள் பனியால் மூடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT