பூரி ஜெகந்நாதர் கோயில் டிச.23-ல் திறக்கப்படுகிறது
கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருக்கும் பூரி ஜெகந்நாதர் கோயில் வரும் 23-ம் தேதி திறக்கப்படுகிறது.
புவனேஸ்வர்: கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருக்கும் பூரி ஜெகந்நாதர் கோயில் வரும் 23-ம் தேதி திறக்கப்படுகிறது.
இது குறித்து முடிவு செய்ய கோயில் நிர்வாகம் தரப்பில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், 12-ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட பூரி ஜெகந்நாதர் கோயிலை வரும் 23-ம் தேதி திறக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பூரி ஜெகந்நாதர் கோயிலை டிசம்பர் 23-ம் தேதி திறக்கலாம் என்ற பரிந்துரையை ஒடிசா அரசுக்கு கோயில் நிர்வாகம் அனுப்பி, ஒப்புதல் கிடைத்ததும், கோயிலை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிகிறது.
Advertisement
அதேவேளையில், கோயில் டிசம்பர் 23-ம் தேதி திறக்கப்பட்டாலும், டிசம்பர் 31 வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்றும், ஜனவரி 3-ம் தேதி முதல் கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.