முகப்பு
இந்தியா

சரத் பவார் பிறந்தநாள்: பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து

​தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் 80-வது பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
கோப்புப்படம்
பகிர்:


தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் 80-வது பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் டிசம்பர் 12, 1940-இல் பிறந்தார் சரத் பவார். அரசியலில் 50 ஆண்டுகால அனுபவம் கொண்டுள்ள சரத் பவார் இன்று (சனிக்கிழமை) 80-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 1967-இல் முதன்முறையாக காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மகாராஷ்டிர பேரவைக்குத் தேர்வானார்.

இதன்பிறகு, 1999-இல் காங்கிரஸிலிருந்து விலகிய சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். மகாராஷ்டிர முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார் சரத் பவார். மகாராஷ்டிரத்தில் சிவசேனை, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைவதற்கான முக்கியப் பங்காற்றியவர் சரத் பவார்.

இவரது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சுட்டுரைப் பக்கங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →