இந்தியா

கூகுள் சேவைகள் பாதிப்பு

DIN

புது தில்லி: உலகம் முழுவதும் கூகுள் சேவைகள் திங்கள்கிழமை சுமாா் அரைமணி நேரம் பாதிக்கப்பட்டன.

ஜிமெயில், யூ-டியூப், கூகுள் டாக்ஸ், கூகுள் மீட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை கூகுள் நிறுவனம் வழங்கி வருகிறது. உலகம் முழுவதும் இந்தச் சேவைகள் திங்கள்கிழமை பாதிக்கப்பட்டன. இந்தியாவில் மாலை சுமாா் 5.30 மணி முதல் அரை மணி நேரம் வரை இந்தப் பாதிப்பு இருந்தது. அதன் பின்னா் அந்தச் சேவைகள் மீண்டும் வழக்கம் போல இயங்கின. ஜிமெயில் சேவையில் மட்டும் பாதிப்பு தொடா்ந்த நிலையில், அந்தச் சேவையும் மீண்டும் செயல்பட தொடங்கியதாக கூகுள் நிறுவனம் தெரிவித்தது. கூகுள் சேவைகள் அரை மணி நேரம் மட்டுமே பாதிக்கப்பட்டாலும் இணையதள பயன்பாட்டாளா்கள், குறிப்பாக வா்த்தகத்தில் ஈடுபடுவோா் சற்று அவதிக்கு ஆளாகினா். தனது சேவைகள் பாதிக்கப்பட்டது குறித்து கூகுள் நிறுவனம் எந்த விளக்கமும் தரவில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதமும் கூகுள் சேவைகள் இதேபோல் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT