இந்தியா

2022 உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி: அகிலேஷ் அறிவிப்பு

DIN

2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்து வரும் உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் 2022ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. மொத்தம் 403 சட்டப்பேரவை இடங்களுக்கான இந்தத் தேர்தலில் கூட்டணி அமைப்பது சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்தார்.

“பெரிய கட்சிகளுடன் ஏற்படுத்தப்பட்ட கூட்டணி சிறப்பாக செயல்படாத நிலையில் சிறிய கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணியை ஏற்படுத்தும்” என அகிலேஷ் தெரிவித்தார்.

மேலும் “2022 ஆம் ஆண்டில் சமாஜ்வாடி கட்சி மாநிலத்தில் பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்கும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக கடந்த 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பல்கலை.யின் ஓட்ட நிகழ்ச்சியை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

SCROLL FOR NEXT