முகப்பு
இந்தியா

தில்லியில் குறையும் கரோனா உறுதி செய்யப்படுவோர் விகிதம்

​தில்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 1.9 சதவிகிதமாக செவ்வாய்க்கிழமை பதிவானது. இதுவரை பதிவானதில் இதுவே குறைந்தபட்ச சதவிகிதம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
கோப்புப்படம்
பகிர்:


தில்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 1.9 சதவிகிதமாக செவ்வாய்க்கிழமை பதிவானது. இதுவரை பதிவானதில் இதுவே குறைந்தபட்ச சதவிகிதம். 

கடந்த 24 மணி நேரத்தில் 85,105 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 1,617 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுள்ளது. 2,343 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 41 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இந்த மாத தொடக்கதிலிருந்தே தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,10,447 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 10,115 ஆக உயர்ந்துள்ளது. தில்லியில் இதுவரை மொத்தம் 73,71,952 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை நிலவரப்படி 15,247 பேர் கரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்தனர். இதுவே செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 14,480 ஆக குறைந்துள்ளது.    

முழு கட்டுரையைப் படிக்க →