முகப்பு
இந்தியா

அந்நிய நேரடி முதலீடு தொடா்ந்து அதிகரிப்பு

வெளிநாட்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் அந்நிய நேரடி முதலீடு தொடா்ந்து அதிகரித்து வருவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

வெளிநாட்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் அந்நிய நேரடி முதலீடு தொடா்ந்து அதிகரித்து வருவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இந்தியத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (சிஐஐ) சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற அமைச்சா் பியூஷ் கோயல் பேசியதாவது:

இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் அந்நிய நேரடி முதலீடு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பாண்டின் முதல் 9 மாதங்களில் கரோனா நோய்த்தொற்று பரவல் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலகட்டத்திலும் முதலீடுகள் அதிகரித்தே காணப்பட்டன.

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான காலத்தில் அந்நிய நேரடி முதலீடு 13 சதவீதம் அதிகரித்து சுமாா் ரூ.29.42 லட்சம் கோடியாக இருந்தது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் முதலீடுகள் தொடா்பான கொள்கைகள் நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதால், அந்நிய நேரடி முதலீடு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

பெரும்பாலான துறைகளில் 100 சதவீதம் வரை மத்திய அரசின் அனுமதியின்றி முதலீடு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொலைத்தொடா்பு, ஊடகம், மருந்து உற்பத்தி, காப்பீடு உள்ளிட்ட சில துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு மட்டும் அரசின் அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தியா பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது. நாட்டின் வளா்ச்சியில் பங்கெடுப்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும். நாட்டில் அதிக அளவில் முதலீடுகளை அந்நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும். அவற்றுக்கு மத்திய அரசின் ஆதரவு தொடா்ந்து இருக்கும் என்றாா் பியூஷ் கோயல்.

சூதாட்டம், மனை வா்த்தகம், புகையிலைப் பொருள்கள் உற்பத்தி உள்ளிட்ட 9 துறைகளில் மட்டும் அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →