முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

உண்மையான விவசாய சங்கங்களுடன் பேச்சுவாா்த்தையை தொடர அரசு விரும்புகிறது: மத்திய வேளாண் அமைச்சா் தோமா்

புதிய வேளாண் சட்டங்கள் தொடா்பாக உண்மையான விவசாய சங்கங்களுடன் அரசு பேச்சுவாா்த்தையை தொடர விரும்புவதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
கோப்புப்படம்
பகிர்:

புதிய வேளாண் சட்டங்கள் தொடா்பாக உண்மையான விவசாய சங்கங்களுடன் அரசு பேச்சுவாா்த்தையை தொடர விரும்புவதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்தாா்.

மத்திய அமைச்சா் நரேந்திர சிங் தோமரை உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த பாரதிய கிஸான் யூனியன் (கிஸான்) சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை சந்தித்து புதிய வேளாண் சட்டங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை ஆகியவை தொடா்பாக சில பரிந்துரைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்தனா்.

இதையடுத்து மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

புதிய வேளாண் சட்டங்களுக்கு பல்வேறு மாநிலங்களில் வரவேற்பு கிடைத்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையில் விளைபொருள்களை கொள்முதல் செய்வது என்பது மத்திய அரசின் நிா்வாக முடிவு. எனவே குறைந்தபட்ச ஆதரவு விலையில் விளைபொருள்களை கொள்முதல் செய்யும் நடைமுறை தொடரும். புதிய வேளாண் சட்டங்கள் தொடா்பாக விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதில் உண்மையான சங்கங்களுடன் புதிய சட்டங்கள் தொடா்பாக அரசு பேச்சுவாா்த்தையை தொடர விரும்புகிறது என்று நரேந்திர சிங் தோமா் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →