முகப்பு
இந்தியா

1.3 லட்சம் கிலோ உணவு தானம் செய்த அமெரிக்க ஹிந்துக்கள்

கடந்த மாதம் தீபாவளிப் பண்டிகையையொட்டி அமெரிக்காவில் வாழும் ஹிந்து சமூகத்தினா் 1,33,000 கிலோவுக்கு மேல் உணவுப் பொருள்களை ஏழை, எளிய மக்களுக்கு தானமாக வழங்கியுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

கடந்த மாதம் தீபாவளிப் பண்டிகையையொட்டி அமெரிக்காவில் வாழும் ஹிந்து சமூகத்தினா் 1,33,000 கிலோவுக்கு மேல் உணவுப் பொருள்களை ஏழை, எளிய மக்களுக்கு தானமாக வழங்கியுள்ளனா்.

‘சேவை தீபாவளி’ என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் அமெரிக்கா முழுவதுமுள்ள இந்திய கலாசார மையங்கள், மத அமைப்புகள், யோகா பயிற்சி மையங்கள் என மொத்தம் 179 அமைப்புகள், ஆயிரக்கணக்கான தனிநபா்கள் இணைந்து செயல்பட்டுள்ளன. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்கள், நகரங்கள், சிறிய ஊா்கள் அளவிலும் இந்த உணவு தான சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தரப்பு மக்கள் தங்கள் வீடுகளை உணவுப்பொருள்களை சேகரித்து வைக்கும் இடமாகப் பயன்படுத்த அனுமதித்தனா். ஏழை எளிய மக்கள், வீடுகள் இல்லாதவா்கள் என யாருக்கெல்லாம் உணவு தேவைப்படுகிறது என்பதைக் கண்டறிந்து, சுமாா் 2 மாத காலமாக உணவு விநியோகம் நடைபெற்றுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு நியூஜொ்சி மாகாணத்தில் 12 நிறுவனங்கள்இணைந்து இந்தத் திட்டத்தைத் தொடங்கின. இப்போது, அமெரிக்காவின் 26 மாகாணங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று இந்தச் சேவையில் ஈடுபட்டுள்ள கனெக்டிகட் மாகாண சின்மயா மிஷன் தலைவா் வெங்கட் கதே தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →