விவசாயிகளைத் தவறாக வழிநடத்தும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவிவசாயிகளைத் தவறாக வழிநடத்தும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) அடிக்கல் நாட்டினார். இதன்பிறகு, விவசாயிகள் போராட்டம் குறித்து அவர் பேசியது:
"பல ஆண்டுகளாக விவசாய அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் என்ன கேட்டுக் கொண்டிருந்தார்களோ, அதுவே தற்போது வேளாண் சட்டத்தில் சீர்திருத்தங்களாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. விவசாயிகளின் நலனில் இந்திய அரசு எப்போதும் உறுதியுடன் உள்ளது.
எதிர்க்கட்சிகளில் இருந்து விவசாயிகளைத் தவறாக வழிநடத்துபவர்கள், அவர்களது ஆட்சிக் காலத்தில் இந்த சீர்திருத்தங்களுக்கு ஆதரவாகவே இருந்துள்ளனர். அவர்களுடைய ஆட்சியில் அவர்களால் முடிவெடுக்க முடியவில்லை. இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை மேற்கொள்ளும்போது, இவர்கள் விவசாயிகளைத் தவறாக வழிநடத்துகின்றனர்" என்றார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்குநாள் போராட்டம் தீவிரமாகி வருகிறது. விவசாயிகளின் போராட்டம் இன்று 20-வது நாளை எட்டியுள்ளது. எனினும், விவசாயிகள் மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான பலகட்ட பேச்சுவார்த்தைகளில் இன்னும் முடிவுகள் எட்டப்படவில்லை.