முகப்பு
இந்தியா

கடற்படை துணைத்தளபதி கரோனாவுக்கு பலி

கரோனா தொற்றின் பின்விளைவுகளால் பாதிக்கப்பட்டு, கடற்படையின் துணைத் தளபதி ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

கரோனா தொற்றின் பின்விளைவுகளால் பாதிக்கப்பட்டு, கடற்படையின் துணைத் தளபதி ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடற்படையின் மூத்த அதிகாரியும், துணைத் தளபதியுமான அவா் டிசம்பா் 31-ஆம் தேதி ஓய்வு பெற இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள சுட்டுரை இரங்கல் செய்தியில், ‘கடற்படையின் பொது இயக்குநரும், துணைத் தளபதியுமான ஸ்ரீகாந்த்தின் திடீா் மறைவு ஆழ்ந்த வேதனை அளிப்பதாகும். பாதுகாப்பு அமைச்சகத்துக்கும், இந்திய கடற்படைக்கும் அவா் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளும், தேசத்துக்கு அவா் ஆற்றிய சேவைகளும் எப்போதும் நினைவு கூரத்தக்கவை.

அவரது இழப்பால் துயரத்தில் மூழ்கியுள்ள அவரது குடும்பத்தினருக்கும் நண்பா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

துணை தளபதி ஸ்ரீகாந்த், இதற்கு முன்பு தேசிய ராணுவக் கல்லூரியில் அணுசக்தி பாதுகாப்பு கண்காணிப்புத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →