முகப்பு
இந்தியா

காஷ்மீரைவிட மேற்கு வங்கத்தின் நிலை மிகவும் மோசம்: பா.ஜ.க.

காஷ்மீரை விட மேற்குவங்க மாநிலத்தின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் விமர்சித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் (கோப்புப்படம்)
பகிர்:

கொல்கத்தா: காஷ்மீரை விட மேற்குவங்க மாநிலத்தின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் விமர்சித்துள்ளார்.

ஈரான், இராக்கில் நிலவுவதைப் போன்று பதற்றமான சூழ்நிலை மேற்குவங்கத்தில் நிலவுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கட்சி ஆலோசனைக்குப் பிறகு  திலீப் கோஷ் பேசியதாவது, ''திரிணமூல் காங்கிரஸ் கட்சி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

ஹைதராபாத், அசாம் ஆகிய பகுதிகளில் நகராட்சித் தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், மேற்குவங்கத்தில் ஏன் நடத்த முடியாது?.

காஷ்மீரை விட மிக மோசமான சூழ்நிலையே மேற்குவங்கத்தில் நிலவி வருகிறது. ஈரான், இராக்கில் நிலவுவதுபோன்று பதற்றமான சூழல் நிலவுகிறது.

மம்தா பானர்ஜி அரசின் சட்டம் - ஒழுங்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு உகந்ததில்லை. கடந்த முறை நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் பாஜக பிரசாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

கொல்கத்தா நகராட்சியில் தேர்தல் நடைபெற்றால் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வியடையும்'' என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →