உத்தரகண்ட் பாஜக எம்.பி.க்கு கரோனா தொற்று
உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் தொகுதி பாஜக எம்.பி. அஜய் பட் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் தொகுதி பாஜக எம்.பி. அஜய் பட் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா தொற்றினால் மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் தொகுதி பாஜக எம்.பி. அஜய் பட்-க்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.