மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு மாற்றுங்கள்: மத்திய அரசு கடிதம்
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு விரைவில் மாற்றக்கோரி மத்திய அரசு மேற்கு வங்க மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
புது தில்லி: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு விரைவில் மாற்றக்கோரி மத்திய அரசு மேற்கு வங்க மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
பாஜக தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது அவரது பாதுகாப்பு வாகனம் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களால் மூன்று இடங்களில் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு இடையே மோதல் போக்கு உருவானது.
பாதுகாப்புப் பணிகளை சரிவரச் செய்யத் தவறியதாக மூன்று 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது மத்திய அரசு குற்றம் சாட்டியிருந்தது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு விரைவில் மாற்றக்கோரி மத்திய அரசு மேற்கு வங்க மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு விரைவில் மாற்றக் கோரி, மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.