முகப்பு
இந்தியா

பாஜக முன்னாள் எம்.பி. சத்யதேவ் சிங் காலமானார்

ஹரியாணாவில் பாஜக முன்னாள் எம்.பி. சத்யதேவ் சிங் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) இரவு உயிரிழந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:


ஹரியாணாவில் பாஜக முன்னாள் எம்.பி. சத்யதேவ் சிங் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) இரவு உயிரிழந்தார்.

அவரது மனைவி இறந்தபிறகு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு அவருக்கு கரோனா தொற்றும் உறுதிசெய்யப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா தொகுதி முன்னாள் எம்.பி.யான சத்யதேவ் சிங், 1980 முதல் 1985 வரை பாஜக மூத்த தலைவராகவும், யுவ மோர்ச்சாவின் தேசியத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.

பாஜகவின் ஒழுக்காற்றுக் குழுவின் தலைவராகவும் சில காலம் பணியாற்றினார். எளிமை மற்றும் வெளிப்படைத்தன்மையான அரசியலால் முன்னாள் பிரதமர் வாஜ்பேயி தலைமையிலான முக்கியக் குழுவிழும் சத்யதேவ் இடம் பெற்றிருந்தார்.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →