முகப்பு
இந்தியா

அயோத்தியில் ஜனவரி 26-ம் தேதி மசூதிக்கு அடிக்கல் 

இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு மாற்றாக அயோத்தியில் கட்டப்பட உள்ள மசூதிக்கு வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு நாளன்று அடிக்கல் நாட்டப்பட உள்ளது. 

Updated On : 17 டிசம்பர், 2020 at 12:04 PM
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு
பகிர்:


அயோத்தி: இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு மாற்றாக அயோத்தியில் கட்டப்பட உள்ள மசூதிக்கு வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு நாளன்று அடிக்கல் நாட்டப்பட உள்ளது. 

அயோத்தியில் அமைய உள்ள மசூதியின் மாதிரி வரைபடம் சனிக்கிழமை வெளியிடப்படும் என்று அதனைக் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு, நமது நாட்டின் அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட ஜனவரி 26-ம் தேதியன்று அயோத்தியில் மசூதிக்கு அடிக்கல் நாட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பல்நோக்கு மருத்துவமனை வளாகம், சமுதாய சமையல் கூடம், நூலகம் உள்ளிட்டவை அடங்கிய இந்த மசூதியின் மாதிரி வரைபடம் டிசம்பர் 19-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இந்த மசூதி வட்ட வடிவில், சுமார் 2000 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தும் வகையில் கட்டப்பட உள்ளது என்று அறக்கட்டளையின் உறுப்பினர் அக்தர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.