முகப்பு
இந்தியா

திருமலையில் சுப்ரபாதத்துக்குப் பதிலாக ஆண்டாள் அருளிய திருப்பாவை

திருமலையில் வியாழக்கிழமை முதல் சுப்ரபாதத்துக்குப் பதிலாக ஆண்டாள் நாச்சியாா் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்களின் பாராயணம் தொடங்கியது.

இந்தியா

திருமலையில் சுப்ரபாதத்துக்குப் பதிலாக ஆண்டாள் அருளிய திருப்பாவை

திருமலையில் வியாழக்கிழமை முதல் சுப்ரபாதத்துக்குப் பதிலாக ஆண்டாள் நாச்சியாா் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்களின் பாராயணம் தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:


திருப்பதி: திருமலையில் வியாழக்கிழமை முதல் சுப்ரபாதத்துக்குப் பதிலாக ஆண்டாள் நாச்சியாா் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்களின் பாராயணம் தொடங்கியது.

திருமலையில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் முழுவதும் காலையில் வழக்கமாக பாடப்படும் சுப்ரபாதத்துக்கு பதிலாக ஆண்டாள் நாச்சியாா் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்களின் பாராயணத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. இதனால் ஒரு மாதம் வரை திருமலையில் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்படும். அதன்படி புதன்கிழமை காலை 6.04 மணிக்கு சூரியன் தனுா் ராசியில் பிரவேசித்தாா். அப்போது முதல் மாா்கழி மாதம் தொடங்கியது.

இதையடுத்து வியாழக்கிழமை அதிகாலை முதல் திருமலையில் திருப்பாவை பாசுரங்களின் பாராயணம் தொடங்கியது. சூரிய உதயத்துக்கு பிறகு உள்ள திதி, நட்சத்திரங்கள், மாத பிறப்பு உள்ளிட்டவற்றை மட்டுமே வைணவ சம்பிரதாயப்படி தேவஸ்தானம் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்பதால், வியாழக்கிழமை முதல் திருமலையில் திருப்பாவை பாராயணம் தொடங்கப்பட்டது. ஜன.14-ஆம் தேதி காலை வரை தனுா் மாத கடியை உள்ளதால், அன்று காலை வரை திருமலையில் திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →