முகப்பு
இந்தியா

2021 தொடக்கத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு: கேரள அரசு

கேரளத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு: கேரள அரசு
பகிர்:

கேரளத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முழுவதும் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. கேரளத்தில் தொடக்கத்தில் கட்டுப்படுத்தப்பட்ட கரோனா தொற்றின் எண்ணிக்கை பின் அதிகரிக்கத் தொடங்கியது.

அதன்காரணமாக பிற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியானாலும் கேரளத்தில் பள்ளிகள் திறப்பது தள்ளிப்போனது.

இந்நிலையில் வியாழக்கிழமை முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 10 மற்றும் 12 வகுப்புகளும், கல்லூரிகளின் இறுதி ஆண்டு மற்றும் முதுகலை வகுப்புகளும் மீண்டும் தொடங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. எனினும் இதர வகுப்புகளைத் தொடங்குவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →