முகப்பு
இந்தியா

உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த கேரள மக்களுக்கு நன்றி: நட்டா

உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவிற்கு வாக்களித்த மக்களுக்கு பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா நன்றி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா (கோப்புப்படம்)
பகிர்:

உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவிற்கு வாக்களித்த மக்களுக்கு பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா நன்றி தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் கடந்த 8, 10 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆகியவை தேர்தலை எதிர்கொண்டன.

தேர்தலில் பதிவான வாக்குகள் புதன்கிழமை எண்ணப்பட்டன. 
கிராம பஞ்சாயத்துகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட பஞ்சாயத்துகளுக்கான தேர்தலில் இடதுசாரி கூட்டணி பெருவாரியாக முன்னிலை வகித்து வருகிறது.

இதனிடையே இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள ஜெ.பி.நட்டா, 

''உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவிற்கு மேம்பட்ட நிலையை அளித்த கேரள மக்களுக்கு நன்றி. இடதுசாரி ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவற்றின் ஊழல், வகுப்புவாதம் மற்றும் பாசாங்குத்தனமான அரசியலை நாங்கள் தொடர்ந்து வெளிக்கொண்டுவருவோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →