உ.பி.யில் மூன்று கட்டங்களாக கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் மூன்று கட்டங்களாக நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் மூன்று கட்டங்களாக நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதில் முதல் கட்டத்தில் மருத்துவமனைகளில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், மத்திய அரசு ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படும். இரண்டாம் கட்டத்தில் நகராட்சி ஊழியர்கள், ராணுவம் மற்றும் காவல்துறையினருக்கும் மூன்றாவது கட்டமாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் கரோனா தொற்று உறுதியானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரோனா தடுப்பூசியை கொண்டு வருதல், பாதுகாப்பாக வைத்தல் உள்ளிட்ட பணிகளில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா தடுப்பூசி இன்னும் ஓரிரு வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று தடுப்பூசி பணிகளை மேற்கொண்ட பிரதமர் மோடி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஜைகோவ்-டி, கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 3 மருந்துகள் பரிசோதனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.