யோகாவை ஒரு போட்டியாக அங்கீகரித்து கெலோ இந்திய விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்க ஆயுஷ் மற்றும் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆலோசனைக்குப் பின்னர் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார்.
யோகாசனம் என்பது யோகாவின் ஒருங்கிணைந்த மற்றும் முக்கியமான அங்கம் என்றும் இது உடல், மன ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் தெரிவித்தார்.
மேலும் யோகாவை தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சேர்ப்பதன் மூலம் இளைஞர்கள் பயன்பெறுவர் என்றும் அனைவருக்குமே ஒரு நிறைவான வாழ்க்கையைப் பெற யோகா உதவுகிறது என்றும் தெரிவித்தார்.
போட்டிகளில் யோகா சேர்ப்பு, உலகெங்கிலும் உள்ள மக்களிடையே யோகா மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் என்று மத்திய விளையாட்டு அமைச்சர் கிரென் ரிஜுஜு தெரிவித்தார்.
ஆனால் எந்தவொரு விளையாட்டின் நோக்கமும் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்பதுதான். எனவே, இது ஒரு நீண்ட பயணத்தின் ஆரம்பம் என்று குறிப்பிட்டார்.
யோகாசனம் 4 நிலைகளில் 51 பதக்கங்களையும், 7 நிலைகளையும் கொண்டதாக இருக்கும் என்றும் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் முன்மொழியப்பட்ட யோகா போட்டியில் பாரம்பரிய யோகாசனம், கலை யோகாசனம் (ஒற்றை), கலை யோகாசனம் (இரட்டையர்), தாள யோகாசனம் (இரட்டையர்), குழு யோகாசனா, சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆகியவை அடங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.