முகப்பு
இந்தியா

அமித் ஷா இல்லம் முன்பு போராட ஆம் ஆத்மி கட்சிக்கு மறுப்பு

உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்தின் முன்பு போராட்டம் நடத்த ஆம் ஆத்மி கட்சிக்கு அனுமதி அளிக்க தில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்தின் முன்பு போராட்டம் நடத்த ஆம் ஆத்மி கட்சிக்கு அனுமதி அளிக்க தில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தில்லியில் டிசம்பர் 21-ஆம் தேதி வரை அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அளித்த அறிக்கையின்படி நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அமைச்சர் அமித் ஷா இல்லத்தின் முன்பு போராட்டம் நடத்த அனுமதிகோரி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராகவ் சந்தா தில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், அமித் ஷா இல்லம் முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்த அனுமதி வழங்குவது குறித்து காவல்துறையினரிடம் கருத்துக் கேட்டது.

இதற்கு காவல்துறை சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தில்லியில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை போராட்டம் அரசியல் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியது. மேலும் கரோனா பரவல் மூன்றாவது அலை வீசிவருவதால், அமித் ஷா இல்லம் முன்பு போராடுவதற்கும் அனுமதி மறுத்து உத்தரவிட்டது.

தில்லியில் நகராட்சி ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்க வலியுறுத்தி தில்லி நகரங்களின் மூன்று மேயர்கள், நகராட்சி உழியர்கள் உள்பட பாஜகவினர் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →