முகப்பு
இந்தியா

'இந்தியக் கூட்டாட்சி மீதான தாக்குதல்' - ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் குறித்து கேஜரிவால் கண்டனம்

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் இந்திய கூட்டாட்சி மீதான தாக்குதல் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

Updated On : 18 டிசம்பர், 2020 at 12:18 PM
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் இந்திய கூட்டாட்சி மீதான தாக்குதல் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

மேற்குவங்கத்தில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் வாகனம் மீது சிலர் தாக்குதல் நடத்திய விவகாரத்தில், உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில், மேற்குவங்கத்தில் உள்ள மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு விடுவிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் மேற்குவங்க அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. இதன் தொடர்ச்சியாக மேற்குவங்கத்தின் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளும் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

Advertisement

இந்நிலையில் இதுகுறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், மேற்கு வங்கத்திலிருந்து ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் என்பது இந்திய கூட்டாட்சி மீதான தாக்குதல் மற்றும் இந்திய அரசின் மீதான உறுதித்தன்மையை நிலைகுலையச் செய்யும் முயற்சி என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், மேற்குவங்க நிர்வாகத்தில் மத்திய அரசின் தலையீட்டை நான் மிகவும் கண்டிக்கிறேன். தேர்தல்களுக்கு முந்தைய காலத்தில் அதிகாரிகளை மாற்றுவது மாநில அரசின் உரிமைகளை பறிக்கிறது என்றும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.