முகப்பு
இந்தியா

திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகிய எம்.எல்.ஏ.வுக்கு எதிராக போராட்டம்

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய சட்ட மன்ற உறுப்பினர் ஜிதேந்தர் திவாரிக்கு எதிராக அந்தக் கட்சியின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகிய எம்.எல்.ஏ.வுக்கு எதிராக போராட்டம் (கோப்புப்படம்)
பகிர்:


மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய சட்ட மன்ற உறுப்பினர் ஜிதேந்தர் திவாரிக்கு எதிராக அந்தக் கட்சியின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்சியிலிருந்து விலகிய சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து அவரது பதாகைகளை கிழித்தெறிந்து அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்.எல்.ஏ. பதவியை சுவேந்து அதிகாரி புதன்கிழமை ராஜிநாமா செய்த நிலையில், பாராக்பூர் எம்எல்ஏ ஷில்பத்ரா தத்தாவும் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது திரிணமூல் கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ.வான ஜிதேந்தர் திவாரி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அன்சோல் மாவட்டத் தலைவர் பொறுப்பிலிருந்தும் விகியுள்ளார். 

இந்நிலையில் இதனைக் கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், திவாரியின் படங்கள் அடங்கிய பதாகைகளை கிழித்து அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட திரிணமூல் தொண்டர் ஒருவர் பேசியதாவது, முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், திரிணமூல் காங்கிரஸிற்கும் ஜிதேந்தர் திவாரி துரோகம் இழைத்துள்ளார்.

வளர்ச்சியின் பெயரில் அன்சோல் மாவட்ட மக்களை இணைத்தார். அவர் ஹிட்ரலைப் போன்று அதிகாரத்தின் பெயரில் திரிணமூல் தொண்டர்களை அணுகினார் என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →