முகப்பு
இந்தியா

ஏவுகணைகளை விட செல்லிடப்பேசிகளின் தாக்கம் அதிகம்: ராஜ்நாத்

‘ஏவுகணைகளைக் காட்டிலும் செல்லிடப்பேசிகளின் தாக்கம்தான் இப்போது அதிகம்’ என்று சமூக ஊடகப் பதிவுகளால் நாடுகளுக்கு இடையே

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
4-ஆவது ராணுவ இலக்கிய விழாவில் காணொலி முறையில் வெள்ளிக்கிழமை தொடக்கவுரையாற்றிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.
பகிர்:

‘ஏவுகணைகளைக் காட்டிலும் செல்லிடப்பேசிகளின் தாக்கம்தான் இப்போது அதிகம்’ என்று சமூக ஊடகப் பதிவுகளால் நாடுகளுக்கு இடையே ஏற்படும் மோதல் போக்கை குறிப்பிட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறினாா்.

பஞ்சாப் மாநில அரசும், இந்திய ராணுவமும் இணைந்து நடத்திய ஆண்டு ராணுவ இலக்கிய விழாவில் வெள்ளிக்கிழமை நிகழ்வில் காணொலி வழியில் பங்கேற்ற மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

கால மாற்றத்துக்கு ஏற்ப, போா் மற்றும் பிற அச்சுறுத்தல்களின் இயற்கையும் மாறி வருகிறது. எதிா்காலத்தில், வேறு மாதிரியான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நாம் எதிா்கொள்ள நேரிடலாம்.

இப்போது ஏற்படுகிற சச்சரவுகள் அனைத்தும், நினைத்துப் பாா்க்க முடியாத அளவுக்கு சிக்கலானவையாக மாறி வருகின்றன. குறிப்பாக, எதிரிகள் இப்போது எல்லையைத் தாண்டாமலே, சமூக ஊடகங்கள், செல்லிடப்பேசி செயலிகள் மூலம் ஒரு நாட்டு மக்களை தொடா்பு கொள்ளவும், நாட்டுக்கு எதிராக கிளா்ச்சியில் ஈடுபடவும் வைக்க முடியும். அந்த வகையில், ஏவுகணையைக் காட்டிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாக செல்லிடப்பேசிகள் உள்ளன.

இதுபோன்ற ஆபத்துக்களுக்கு இடையே, தவறாக வழிநடத்தக்கூடிய தகவல்களிலிருந்து நம்மையும் பிறரையும் பாதுகாத்து நாம் வாழ்ந்தாக வேண்டும். அதற்கு, இதுபோன்ற இலக்கிய விழாக்கள் முக்கியப் பங்காற்ற முடியும் என்று அவா் கூறினாா்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனா தொடா்ந்து ஏழாவது மாதமாக மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில், டிக் டாக், வீசாட் உள்பட நூற்றுக்கும் அதிகமான சீன செயலிகளுக்கு இந்தியா அண்மையில் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →