முகப்பு
இந்தியா

டிச.26-இல் அசாமில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் அமித்ஷா

அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டிசம்பர் 26ஆம் தேதி மத்திய உள்துறை அமித்ஷா அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக மாநில பாஜக தலைவர் நுமல் மொமின் தெரிவித்துள்ளார்.

Updated On : 19 டிசம்பர், 2020 at 5:24 PM
மத்திய உள்துறை அமித்ஷா
பகிர்:

அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டிசம்பர் 26ஆம் தேதி மத்திய உள்துறை அமித்ஷா அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக மாநில பாஜக தலைவர் நுமல் மொமின் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான அமித்ஷா பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 26ஆம் தேதி அசாம் மாநிலத்திற்கு அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாற்றுக் கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பாஜகவில் சேர விருப்பம் தெரிவித்து வருவதாக மாநிலத் தலைவர் நுமல் அமித்ஷா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

Advertisement

கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகலைக் கடைபிடிக்கும் முன்னாள் அமைச்சரவை அமைச்சரும்,  சட்டமன்ற உறுப்பினருமான அஜந்தா நியோக், சமீபத்தில் அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் மற்றும் மாநில நிதியமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோரைச் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் அஜந்தா நியோக் கட்சியை விட்டு வெளியேறினால், அது கட்சியை பாதிப்படையச் செய்யாது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.