வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஹரியாணா பாஜகவின் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பீரேந்தர் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 24 நாள்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவளித்து வரும் நிலையில் ஹரியாணா பாஜகவின் மூத்தத் தலைவராக அறியப்படும் பீரேந்தர் சிங் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் பொருளாதார நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சுவதால் அவர்களுடன் நிற்பது தார்மீக பொறுப்பு என பீரேந்தர் சிங் தெரிவித்தார்.
தில்லி எல்லையில் உள்ள ஹரியாணா பகுதிகளில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திலும் தான் ஈடுபடப் போவதாக பீரேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.