முகப்பு
இந்தியா

விவேகானந்தரின் பாதையில் நடப்போம்: அமித் ஷா

ஆன்மீகத்தையும், நவீனத்துவத்தையும் இணைத்த விவேகானந்தரின் பாதையில் நடப்போம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப்படம்)
பகிர்:

மேற்குவங்கத்தில் பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆன்மீகத்தையும், நவீனத்துவத்தையும் இணைத்த விவேகானந்தரின் பாதையில் நடப்போம் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள்கள் பயணமாக மேற்குவங்கத்திற்கு சென்றுள்ளார். கொல்கத்தா சென்ற அவர், ராமகிருஷ்ண ஆசிரமத்தில் வழிபாடு நடத்தினார். அதனைத்தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அமித் ஷா, ''இது விவேகானந்தர் பிறந்த இடம். ஆன்மீகத்தையும், நவீனத்துவத்தையும் இணைத்தவர் சுவாமி விவேகானந்தர். அவர் நமக்கு காட்டிய உன்னதமான வழியில் நடப்போம்'' என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →