மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,811 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 3,811 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 3,811 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 2,064 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 98 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 18,96,518 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 17,83,905 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் 48,746 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி இன்னும் 62,743 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.
Advertisement
அங்கு குணமடைவோர் விகிதம் 94.06 சதவிகிதம். இறப்பு விகிதம் 2.57 சதவிகிதம்.
மும்பை:
மும்பையில் மேலும் 586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 2,86,850 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 16 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,996 ஆக உயர்ந்துள்ளது.