FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி

புதுவையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Updated On : 9 ஏப்ரல் 2026, 7:36 am IST
பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்
பகிர்:

புதுவையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்கள் தொடங்கும் வேளையில், வாக்காளர்கள் அனைவரும் பெருமளவில், முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் திரண்டு வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Advertisement

Advertisement

குறிப்பாக, நமது இளைஞர்களும் பெண் வாக்காளர்களும் ஜனநாயகச் செயல்முறையை வலுப்படுத்த முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். புதுச்சேரியின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது எனப் பதிவிட்டுள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 9.50 லட்சம் வாக்காளர்கள் (ஆண்கள் 4,46,667, பெண்கள் 5,03,832, மூன்றாம் பாலினத்தவர் 140) வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

summary

Puducherry election 2026 Every Vote is Important for Puducherry's Future: Prime Minister Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments