முகப்பு
இந்தியா

ஓரிரு நாள்களில் விவசாயிகளைச் சந்திக்கிறார் தோமர்: அமித் ஷா

மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஓரிரு நாள்களில் விவசாயிகளைச் சந்திக்கவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
கோப்புப்படம்
பகிர்:


மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஓரிரு நாள்களில் விவசாயிகளைச் சந்திக்கவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதுபற்றி தெரிவித்தது:

"தோமர், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நாளை அல்லது நாளை மறுநாள் விவசாயப் பிரதிநிதிகளைச் சந்திக்கிறார். ஆனால், அவர் சந்திக்கவிருக்கும் சரியான நேரம் குறித்து எனக்குத் தெரியவில்லை." 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் தொடர்ந்து 25 நாள்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையே இதுவரை நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் எட்டப்படவில்லை. இந்த நிலையில் விவசாயிகளைச் சந்திக்கிறார் நரேந்திர சிங் தோமர்.

முழு கட்டுரையைப் படிக்க →