கேரளத்தில் புதிதாக 3,423 பேருக்கு கரோனா
கேரளத்தில் புதிதாக 3,423 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் புதிதாக 3,423 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"மாநிலத்தில் புதிதாக 3,423 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 48 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 2,982 பேருக்கு தொடர்பிலிருந்ததன்மூலம் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 359 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது இன்னும் கண்டறியப்படவில்லை.
Advertisement
மேலும் 27 பேர் நோய்த் தொற்று காரணமாக பலியாகியிருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 2,843 ஆக உயர்ந்துள்ளது.
4,494 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,45,779 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், 60,054 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சையில் உள்ளனர்."