தில்லி விவசாயிகள் போராட்டத்தில் ஹரியாணா முன்னாள் முதல்வர்
தில்லி விவசாயிகள் போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் கலந்துகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
இந்தியாதில்லி விவசாயிகள் போராட்டத்தில் ஹரியாணா முன்னாள் முதல்வர்
தில்லி விவசாயிகள் போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் கலந்துகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
தில்லி விவசாயிகள் போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் கலந்துகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லியில் விவசாயிகளின் போராட்டம் இன்று 26 ஆவது நாளை எட்டியுள்ளது. தில்லி சிங்கு எல்லையை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் கடும் குளிரிலும் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ள அவர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், ஹரியாணா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத் காசிப்பூர் எல்லையில் விவசாய சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினார். விவசாயிகள் எதிர்க்கும் சட்டங்களை அரசு திரும்பப் பெறவேண்டுமென்று அவர் கோஷமிட்டார். மேலும் போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வின்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் ராவத்துடன் இருந்ததாக காங்கிரஸ் உறுப்பினர் நரேந்திர ரதி தெரிவித்தார்.
இதுகுறித்து ஹரிஷ் ராவத், 'நான் ஒரு விவசாயியின் மகன், விவசாயிகளின் பிரச்னைகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களின் போராட்டத்துக்கு என் முழு ஆதரவைத் தெரிவிக்கிறேன். மூன்று விவசாய விரோதச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறேன்' என்றார்.