முகப்பு
இந்தியா

அமித் ஷா கூறியவை அனைத்தும் பொய்: மம்தா பானர்ஜி

பாஜக ஒரு ஏமாற்றுக்கட்சி என்றும் அது அரசியலுக்காக எதையும் செய்யக்கூடியது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
மம்தா பானர்ஜி
பகிர்:

மேற்குவங்க மாநிலத்தின் வளர்ச்சி குறித்து அமித் ஷா கூறியவை அனைத்தும் பொய்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்குவங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது:

மேற்குவங்க மாநிலத்தின் வளர்ச்சி குறித்து அமித் ஷா நேற்று சொன்னவை அனைத்தும் பொய்கள். அவர் மேற்குவங்கத்தில் தொழில் வளர்ச்சி இல்லை என்று கூறுகிறார். ஆனால், சிறு, குறு, நடுத்தர நிறுவன வளர்ச்சியில் மேற்குவங்கம் முதலிடத்தில் உள்ளது. 

பாஜக தலைவர் அமித் ஷா தொடர்ந்து பொய்களை அடுக்குகிறார். பாஜக ஒரு ஏமாற்றுக்கட்சி. அரசியலுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள். அமித் ஷா உள்துறை அமைச்சர் என்பதை மறந்துவிடக் கூடாது. அமைச்சராக இருந்துகொண்டு அவர் இவ்வாறு பொய் சொல்லக்கூடாது என்று தெரிவித்தார். 

மேலும் சிஏஏ மூலம் மக்களின் தலைவிதியை பாஜகவினால் தீர்மானிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.