மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 6,053 பேர் குணம்
மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 6,053 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 6,053 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 2,234 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 18,99,352 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 55 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 48,801 ஆக உயர்ந்துள்ளது.
ஒரேநாளில் 6,053 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 17,89,958 பேர் குணமடைந்துள்ளனர்.
Advertisement
மகாராஷ்டிரத்தில் குணமடைவோர் விகிதம் 99.24 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.57 சதவிகிதமாக உள்ளது.
மும்பை:
மும்பையில் புதிதாக 463 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,87,313 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 12 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 11,008 ஆக உயர்ந்துள்ளது.