கரோனா பாதிப்பு: ரஷியாவில் புதிய உச்சம்
ரஷியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் புதிதாக 29,350 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 5,792 பேருக்கு (19.7 சதவிகிதம்) எவ்வித அறிகுறியும் தென்படவில்லை.
இந்தியாகரோனா பாதிப்பு: ரஷியாவில் புதிய உச்சம்
ரஷியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் புதிதாக 29,350 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 5,792 பேருக்கு (19.7 சதவிகிதம்) எவ்வித அறிகுறியும் தென்படவில்லை.
ரஷியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் புதிதாக 29,350 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 5,792 பேருக்கு (19.7 சதவிகிதம்) எவ்வித அறிகுறியும் தென்படவில்லை.
இதைத் தொடர்ந்து, ரஷியாவில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 28,77,727 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக செயின்ட். பீட்டர்ஸ்பர்கில் 3,752 பேரும், மாஸ்கோ பிராந்தியத்தில் 1,523 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரஷியாவில் கரோனா தொற்றால் மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 50,242 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பாதிப்பில் புதிய உச்சம் தொட்டிருந்தாலும், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் விகிதம் 1 சதவிகிதத்தைத் தாண்டவில்லை என ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, டிசம்பர் 6-இல் 29,039 பேர் பாதிக்கப்பட்டதே ஒருநாள் அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.