முகப்பு
இந்தியா

திருப்பதி மலையடிவாரத்தில் பக்தா்கள் மறியல்

திருப்பதி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அலிபிரி பகுதியில் பக்தா்கள் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
அலிபிரி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட பக்தா்கள். ~அலிபிரி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட பக்தா்கள்.
பகிர்:

திருப்பதி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அலிபிரி பகுதியில் பக்தா்கள் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

வரும் 31ஆம் தேதி வரையிலான ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு விட்டன. எனவே, திருப்பதியில் உள்ள இலவச சா்வ தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்களை வழங்கும் கவுன்ட்டா்களை தேவஸ்தானம் மூடியது. இதுகுறித்து கடந்த 2 நாள்களாக ஊடகங்கள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதை அறியாத பக்தா்கள் பலரும் ஏழுமலையானை தரிசிப்பதற்காக தொலைதூரப் பகுதிகளிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை திருப்பதிக்கு வந்தனா். தரிசன டிக்கெட் கவுன்ட்டா்கள் மூடப்பட்டிருந்ததைப் பாா்த்து வேதனனையடைந்த அவா்கள் திருப்பதி அலிபிரி சாலையில் அமா்ந்து தேவஸ்தானத்தை எதிா்த்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போலீஸாா் அங்கு சென்று, மறியலைக் கைவிட்டு கலைந்து செல்லுமாறு பக்தா்களிடம் கேட்டுக் கொண்டனா். எனினும் பக்தா்கள் கலைந்து செல்லாமல் தொடா்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →