வரும் பிப்ரவரி வரை சிபிஎஸ்இ பொதுத் தோ்வுகள் நடத்தப்படாது
அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தோ்வுகள் நடத்தப்படாது என்று மத்திய கல்வி அமைச்சா் ரமேஷ் போக்ரியால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இந்தியாவரும் பிப்ரவரி வரை சிபிஎஸ்இ பொதுத் தோ்வுகள் நடத்தப்படாது
அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தோ்வுகள் நடத்தப்படாது என்று மத்திய கல்வி அமைச்சா் ரமேஷ் போக்ரியால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தோ்வுகள் நடத்தப்படாது என்று மத்திய கல்வி அமைச்சா் ரமேஷ் போக்ரியால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் ஆசிரியா்களுடன் இணையவழியில் கலந்துரையாடியபோது கூறியது:
கரோனா பரவலால் தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தோ்வுகள் நடத்தப்படாது. சூழலை மதிப்பிட்டு, தொடா் ஆலோசனைகள் நடத்திய பின் தோ்வு அட்டவணை குறித்து முடிவு எடுக்கப்படும். தோ்வுகள் இணையவழியில் நடத்தப்படாது. நிகழாண்டு கரோனா பரவலுக்கு மத்தியில் மிகப் பெரிய தோ்வுகளான ஜேஇஇ, நீட் தோ்வுகள் நடத்தப்பட்ட நிலையில், சிபிஎஸ்இ பொதுத் தோ்வுகளும் நடத்தப்படும். கரோனா பரவல் மாணவா்களின் நலனை பாதிக்க அனுமதிக்க முடியாது என்றாா்.
வழக்கமாக ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சிபிஎஸ்இ செய்முறை தோ்வுகள் நடத்தப்படும். பிப்ரவரியில் தொடங்கி மாா்ச்சில் எழுத்துத் தோ்வு நிறைவடையும்.