தாராவியில் புதிதாக ஒருவருக்கு மட்டுமே கரோனா
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக ஒருவருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக ஒருவருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம்:
மாநிலத்தில் புதிதாக 3,106 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 4,122 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 75 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,02,458 ஆக உயர்ந்துள்ளது. இதில் 17,94,080 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 48,876 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் 58,376 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாராவி:
புதிதாக ஒருவருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,782 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,460 பேர் ஏற்கெனவே நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்ததையடுத்து, மொத்தம் 10 பேர் மட்டுமே இன்னும் கரோனாவுக்கான சிகிச்சையில் உள்ளனர்.